சிம்பு நடித்துள்ள பத்து தல படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’-யின் ரீம்மேக் தான் ’பத்து தல’. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தினை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ’பத்து தல’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சிம்புவின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை பார்த்தவர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வரப்பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள் : குழந்தையின் க்யூட்டான ஆசையை நிறைவேற்றிய விஜய்!
https://twitter.com/StudioGreen2/status/1641751028923273218?t=uWSZWcYpkqZBVBkM7ztfHQ&s=08
இந்நிலையில், பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ’பத்து தல’ படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலித்துள்ளது. மேலும் சிம்புவின் திரை வரலாற்றில் இது சிறந்த ஓபனிங்காகவும் கருதப்படுகிறது.








