பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்க தேவையில்லை – குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) அளிக்க தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த்…

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) அளிக்க தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவரங்களைக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பிரதமர் மோடியின் முதுகலை (எம்ஏ) பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு சிஐசி உதவியுடன் குஜராத் பல்கலைக்கழகத்தில் கேட்டிருந்தார். இதை வழங்கக் கோரி, தலைமை தகவல் ஆணையர்  உத்தரவிட்டதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் அந்த மாநில உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்ததோடு, இவ்வழக்கும்
விசாரிக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) அளிக்க தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி பிரேன் வைஷ்ணவ், 2016 ஆம் ஆண்டு தலைமை தகவல் ஆணையத்தின் (சிஐசி) உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் 25,000 அபராதமும் விதித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தங்கள் பிரதமரின் கல்வி பற்றி அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? நீதிமன்றத்தில் பட்டத்தை காட்டுவதற்கு அவர் ஏன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.? மற்றும் பட்டங்களை பார்க்க கோருபவர்கள். மீதே அபராதம் விதிக்கப்படுமா? அதிலும் பிரதமர் எவ்வளவு படித்துள்ளார் என்பதை அறியும் உரிமை கூட நாட்டிற்கு இல்லையா? இது என்ன நடக்கிறது? என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.