கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு நடிக்கும் படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியிடப் பட்டுள்ளது.
நடிகர் சிம்பு, இப்போது ’மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உட்பட பலர் நடித்துள் ளனர். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு, ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று டைட்டில் வைத்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.
’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவுடன் இணைந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிறகு ’அச்சம் என்பது மடமையடா’படத்தையும் சிம்பு நடிப்பில் இயக்கினார். மூன்றாவது முறையாக, ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின், புதிய டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதனால் அந்த டைட்டிலுக்கு என்ன பிரச்னை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கத் தொடங் கினர்.
https://twitter.com/SilambarasanTR_/status/1423535747307499522
சிம்புவின் 47 வது (#STR47) படமான இதன் புதிய டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற பாரதியாரின் வரியை டைட்டிலாக வைத்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.








