கும்பக்கரை அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனியைச் சேர்ந்த பாலமுருகன், எழுமலையைச் சேர்ந்த கந்தசாமி, உசிலம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் உள்ளிட்ட மூவரும் முன்னாள் ராணுவத்தினர். இவர்களுடைய நண்பர்களான திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டிய ராஜன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வடிவேலு உள்ளிட்ட 5 பேரும் நேற்று ஒன்றாகச் சேர்ந்து மது போதையில் கும்பக்கரை அருவியில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அருவியில் குளித்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வனக்காவலரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த வனக்காவலர்கள் அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு பணியிலிருந்த வனக்காவலர் செந்திலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது வனக்காவலர் பீமராஜ் என்பவர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர்கள் காரில் வைத்திருந்த கத்தியை எடுத்துத் தாக்க முற்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் மதுபோதையில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட போதை ஆசாமி சரவணகுமாரை மருத்துவமனைக்கு அழைத்தபோது வராமல் அங்கேயே இருந்து காவல்துறையினரையும் வனத்துறை அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் பேசி 2 மணி நேரத்திற்கு மேலாக பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘“உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” – திருமாவிடம் உருகிய தாயார்’
இந்நிலையில், தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினர் மூவர் மீது மட்டும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கும்பக்கரை அருவியில் மதுபோதையில் 5 பேரும் சேர்ந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்த நிலையில் அரசியல் முக்கிய பிரமுகரின் தலையீட்டால் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டிய ராஜன் மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வடிவேல் என்ற இருவர் மீது புகார் கொடுக்காமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் கீழே விழுந்து காயமடைந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில், தப்பியோடிய இந்த வழக்கில் முதல் குற்றவாளியான உசிலம்பட்டியைச் சேர்ந்த சரவண குமார் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.