சூர்யா சிவா கைதை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

திருச்சி சிவா எம்பி மகன் சூர்யா கைதுக்கு எதிராக திருச்சியில் பாஜகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  திருச்சி சிவா எம்பி மகனும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா நேற்று…

திருச்சி சிவா எம்பி மகன் சூர்யா கைதுக்கு எதிராக திருச்சியில் பாஜகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

திருச்சி சிவா எம்பி மகனும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த பாஜக ஓபிசி மாநில
பொதுச்செயலாளர் சூர்யா சிவா நேற்று முன்தினம் பேருந்து கடத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்
போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது போலீசாரை
மிரட்டும் வகையில் பாஜகவினர் ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும்
பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். பாஜகவினரின் போராட்டத்தினால் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டதுடன் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், மனிதாபிமானமற்ற காவல்துறையாக, திமுகவின் கைத்தடிகளாக காவல்துறை செயல்படுத்துவதை உணர்த்துகிறது. சூர்யாசிவா கார் மீதான விபத்தை ஏற்படுத்திய பேருந்து மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுகவிலிருந்து பாஜகவிற்கு வந்துவிட்டார் என்ற ஒரே காரணத்தினால் அவரை பழிவாங்கும் நோக்கில் பாஜகவினர் மற்றும் பாஜகவில் இணைவோர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக, அச்சுறுத்தும் நடவடிக்கையாக மேற்கொண்டிருக்கிறார்.

கலைஞர் காலத்தில் இருந்து, கனிமொழி பிறப்பு முதல் இது நடந்து வருகிறது. இதற்கு பாஜக பயப்படாது. இன்னும் கொஞ்ச மாதங்களில், கொஞ்சம் ஆண்டுகளில் பாஜக ஆட்சி தமிழகத்தில் வரப்போகிறது. ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொய்வழக்கு போடலாம் என்று நினைக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி நீடிக்காது. அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் விபரங்கள் எங்களிடம் உள்ளது, அதிகம் ஆடினால் வாலை ஓட்ட நறுக்கிவிடுவோம் என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைதி வழியில் போராட்டம் நடத்திய பாஜகவை மிரட்டல் விடுத்து, பாஜகவின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். காவல்துறைக்கு திமுக அழுத்தம் கொடுத்தால் ஏதேனும் செய்து விடுவார்களா? அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பாஜகவில் இணைவோர் மீது அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் காவல்துறையைக் கொண்டு மிரட்டல் விடுக்கின்றனர், முடிந்ததை செய்து பார் நாங்கள் எதுக்கும் பயப்பட மாட்டோம், அடுத்ததாக மாநில தலைவர் கொண்டு பல்லாயிரக்கணக்கான திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.