திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து…

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், அந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது.   காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  தொடரும் கனமழை | மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு…

மேலும் காலை 1 மணி நிலவர படி இதுவரை சுமார் 400 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை
பெற்றுள்ளதாக திண்டிவனம் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து தீவிர காய்ச்சல் பிரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள்
அனுமதிக்கப்பட்டுள்ளர்.  மருத்துவர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து சிகிச்சை பெறுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.