கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  my…

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

my v 3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரும் என
கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில்
புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, சக்தி ஆனந்தன், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும்
சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.