ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் : ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

ஷாருக்கான் நடித்து வெளியாக உள்ள “ஜவான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ளார். தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

ஷாருக்கான் நடித்து வெளியாக உள்ள “ஜவான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளைத் பிஸியாகி உள்ள இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே இந்தப் படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் அப்டேட்டை அறிவித்துள்ளார்.  அதன்படி ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Atlee_dir/status/1654821368620544007

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.