தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. 4 பிளாக்குகளாக அமைந்துள்ள இந்தச் சிறையில் 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் 3-வது பிளாக்கில் இருந்த சிறைவாசி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் சிறைப் பிளாக்கின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, சிறிது நேரத்திலேயே அந்தப் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகள் தப்பியோடினர். மேலும், அவர்கள் சிறைக்காவலர்கள் இருவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தப்பியோடிய சிறைக்கைதிகளை போலீசார் 17 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதனிடையே 4 கைதிகள் பிடிபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ட்ரோன்களின் உதவி கொண்டு அருகாமையில் உள்ள காடுகளில் தேடி வருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்துயுள்ள நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படைகளின் எண்ணிக்கை 25-ஆம் உயர்ந்துள்ள நிலையில் சிறைத்துறை டிஜிபி, தேனி மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சிரையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே 17 சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் 9 சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த நிலையில் 17 சிறைவாசிகளில் 5 சிறைவாசிகளை காவல்துறையினர் கைது செய்த நிலையில் மேலும் 8 சிறைவாசிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி தகவல் தெரிவித்துள்ளார். ட்ரோன் கேமராக்கள் வழியாக கண்காணிப்பு பணியில் 8 சிறைவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தப்பி ஓடிய 17 சிறைவாசிகளில் 13 சிறைவாசிகள் கைது செய்யப்பட்டனர்.




