ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ் பாண்டே முதலிடத்தில் உள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார்.

20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
140 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை டேவோன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் மதவால் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 139 ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை சமன் செய்யப்பட்டது. 15 பந்துகளுக்கு 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி ஒரு ரன் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் அணி 13 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் 2023 ஆண்டின் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களின் பட்டியலில் துஷார் தேஷ்பாண்டே முதலிடத்திலும், குஜராத் அணியின் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரும் தலா 18 விக்கெட்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதிக விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்த துஷார் தேஷ்பாண்டேவிடம் பர்பிள் கேப் உள்ளது குறிப்பிடத்தக்கது.







