முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சபரீசன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 13 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே , மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தை காண பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், நயன்தார விக்னேஷ் சிவன் ஜோடி, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசியல் பிரபலங்களான அமைச்சர் உதயநிதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , சபரீசன் ஆகியோரும் நேரில் ஆட்டத்தை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் சபரீசனுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து உரையாடிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.







