பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் 2013ஐ முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி, பிலா திரிவேதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பல உத்தரவுகளை பிறப்பித்தனர். அப்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பாலியல் புகார் தெரிவிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். மாநில அரசுகள் அளவிலும் பல்கலைக்கழகங்கள் அரசின் துறைகள் மற்றும் பிற இடங்களில் இந்தச் சட்டம் வாயிலாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேலை கொடுக்கும் நிறுவனங்கள் அதில் வேலை செய்யும் நபர்கள் என அனைவருக்கும் இந்த சட்டம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிறுவனங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி அனைத்து ஊழியர்களிடமும் இந்த சட்டம் குறித்து கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமி ஆகியவை தங்களது நிகழ்ச்சி நிரல்களில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 குறித்து இடம்பெற வேண்டும் போன்ற உத்தரவுகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி, பிலா திரிவேதி ஆகியோர் அமர்வு பிறப்பித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா