முதல்முறையாக விமானத்தில் பயணித்த தந்தை ஒருவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான முகபாவனைகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் காண்பிப்பதைப் போன்று மனிதர்களாகிய நாம் விமானத்தை பார்த்து வியப்பது உண்டு. வானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது மிகவும் அரிது என்று சொல்லும் அளவுக்கு, விமானத்தின் மீதான ஈர்ப்பு எல்லோரிடமும் காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் முறை விமானத்தில் செல்லும் நபர்களின் மகிழ்ச்சியையும், உணர்ச்சி வெளிப்பாட்டையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் மகன் ஒருவர் தனது தந்தையை விமானத்தில் முதல் முறையாக அழைத்துச் செல்கிறார். அப்போது அவரது தந்தை கொடுக்கும் முகபாவனைகள், காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
ஜதின் லம்பா எனும் இன்ஸ்டாகிராம் பயனர், தனது தந்தையை மும்பைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதையும், அவரது தந்தை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியையும் வீடியோவாக பதிவு செய்து, தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’மகனாக பெருமைப்படுகிறேன்’ என்ற குறிப்புடன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பயனர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!
இந்த வீடியோ 20,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்கும் இன்ஸ்டாகிராம் வாசிகள், தந்தையை விமானத்தில் அழைத்துச் சென்ற மகனுக்கு பாராட்டையும் வாழ்த்தையும் கூறிவருகின்றனர்.