குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான் என தெரிவித்தனர்.
போக்சோ சட்டம், நமது குழந்தைகளை காப்பாற்றவும் அவர்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உறுதி செய்யவும் இயற்றப்பட்டது எனவும் நீதிபதிகள் கூறினர். குழந்தையை வளர்க்க பணம் அனுப்புவதால் மட்டும் மனுதாரர் மீதான தண்டனையை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.







