உதகையில் ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, உதகையில் கடுங் குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டு தாமதமாக உறைபனிப்பொழிவு தொடங்கியது. ஜனவரி முதல் தொடர்ந்து கடுமையான உறை பனி பொழிவு காணபட்டது. இதனால் இன்று அதிகாலை உதகை நகரம் காலை வேலைகளில் உறைபனி பொழிவால் பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல் மினி காஷ்மீரை போல் காட்சியளித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் 2 நாட்கள் சாரல் மழை பெய்ததால் கடந்த ஒரு வார காலமாக
உறைபனி பொழிவு காணபடவில்லை. இந்நிலையில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கடுங்குளிர் நிலவி வந்த நிலையில் இன்று உறை பனி பொழிவு காணபட்டது.
உதகை சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், தலைக்குந்தா, கேத்தி, அவலாஞ்சி
பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணபட்டது. உதகை நகர் பகுதியில்
குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் கடுங்குளிர் நிலவி வருவதால் விவசாய வேலைக்கு செல்பவர்கள், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.







