முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் கனமழை எதிரொலி; வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னையை சுற்றியுள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 புள்ளி 33 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2ஆயிரத்து 942மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, அதன் மொத்த உயரமான 21 புள்ளி 20 அடியில், தற்போது 19 புள்ளி 52 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரில், தற்போது 2 ஆயிரத்து 916 கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 357 கனஅடியாக உள்ள நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33 புள்ளி 98 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில் தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18 புள்ளி 86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley karthi

அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

Niruban Chakkaaravarthi