கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் தொடர் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை…

சென்னையில் தொடர் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்று சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் பகுதியில் உள்ள கால்வாயை முதலமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சென்னை வ.உ.சிதம்பரம் சாலையில் கனமழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் இந்த பகுதியில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.