முக்கியச் செய்திகள் இந்தியா

துப்பாக்கியால் சுட்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேர் பலி: சக வீரர் திடீர் தாக்குதல்

சிஆர்பிஎஃப் வீரர்களின் முகாமில் சக வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம், தெலங்கானா எல்லையில் இருக்கிறது. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் என்பதால், அந்தப் பகுதியில் முகாம் அமைத்து சிஆர்பிஎஃப் வீரர்கள், நக்சலைட்டுகளை தேடி வருகின்றனர். அங்குள்ள லிங்கம்பள்ளி கிராமத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)யின் 50 பட்டாலியன் முகாம் அமைந்துள் ளது. இங்கு இன்று அதிகாலை 3.40 மணிக்கு அங்கு துப்பாக்கி ச்சூடு சத்தம் கேட்டது. நக்சலைட்டுகள் என நினைத்து வீரர்கள் உஷாராயினர்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ரதீஷ் ரஞ்சன் என்ற சக வீரர் என்பது தெரிய வந்தது. அவர் தனது ஏகே 47 துப்பாக்கியால் வீரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதில் ராஜ்மணி குமார் யாதவ், ராஜிப் மொண்டல், தஞ்ச், தர்மேந்திரகுமார் ஆகிய வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மற்ற வீரர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு பத்ராச்சலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

’இந்த சம்பவம் தொடர்பாக வீரர் ரதீஷ் ரஞ்சனிடம் விசாரனை நடந்து வருகிறது. சிஆர்பிஎஃப் சார்பாக நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அந்தப் பகுதியின் ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்து: 32 பேர் பலி

Jeba Arul Robinson

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: ஃபிஜி அரசு அதிரடி

Gayathri Venkatesan