முக்கியச் செய்திகள் தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள் ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங் களில் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த, சென்னை வானிலை மைய தென்டமண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும்போது, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றார்.

இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஏரி கரையை ஒட்டிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

Halley karthi

நயன்தாரா படத்தின் பாடல் நாளை வெளியீடு: அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்

Saravana Kumar

நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

Halley karthi