தமிழ்நாடு அரசு சார்பில் இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக, நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூகநீதி குறித்து வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் புத்தகம் வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
புத்தகத்தை தயாரிக்க கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இட ஒதுக்கீட்டு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோரை கொண்டு குழு அமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சார்பில் இந்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், புத்தகம் வெளியிடுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.








