இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முன் தினம் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல் மருந்துகளை ஏற்கும் நிலையை படிப்படியாக இழந்தது. மேலும் அவரது உடல் உறுப்புகளும் செயலிழக்க தொடங்கியது. இதனால் இன்று மதியம் 1 : 55 மணிக்கு உயிரிழந்துள்ளார்.








