நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து உட்கட்சிப் பூசல் அதிகரித்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் பலரும் போர்கொடி தூக்கினர். இதனையடுத்து நடந்த பெச்சுவர்த்தையை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி மீண்டும் பழனிசாமியுடன் இணைந்தார்.
ஆனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில தவெக தலைவர் விஜய் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோருக்கு தவெக வில் பதவிகள் வழங்கியிள்ளார்.
அதன்படி சி.விஜய பாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும், எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும், இசக்கி சுப்பையாவுக்கு தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.




