“நியாயமான தொகுதி மறுவரையறையே எங்கள் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக கூட்டணியைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு குறித்து இதுவரை முழுமையான தெளிவு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் நிலவும் மேக்கேதாட்டு விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. அதேவேளையில், நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

தேர்தல் நேரத்தில், திமுக தலைவரும் அப்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தமிழ்நாட்டின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதே முக்கியம் என்பதை வலியுறுத்தியிருந்தார். தேர்தல் வெற்றியைக் காட்டிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதே முதன்மையானது.

அதுவே எங்களின் நிலைப்பாடு. எங்கள் தலைவரின் நோக்கமும் அதுதான். தமிழக அரசின் தலைமைச் செயலர், தவெக தலைமையகத்தின் செயலரைப் போன்று செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்வதுடன், கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.