“தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும்!” – திருமாவளவன்

நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்கும் விதமாக இன்று சென்னை கலைவானர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற நிலையில் திமுக அதிமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.

இந்தகூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, “இந்தக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும், தற்போதுள்ள 543 என்ற எண்ணிக்கையை தொடர வேண்டும், மாநிலங்களுக்கான எண்ணிக்கையையும் தொடர வேண்டும், நாடாளுமன்ற தொகுதி எண்ணிகையை அனைத்து மாநிலங்களிலும் 50 சதவிதம் உயர்த்தலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் , மாக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையி கூட்டக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களைவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எம்.எல்.ஏக்கள் அடிப்படையில் இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையை கொண்டுவர வேண்டும். தனித் தொகுதிகளுக்கான சுழற்சி முறையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய அரசு உறுதியாக இறுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை இக்கூட்டத்தில் விசிக சார்பில் முன்வைத்துள்ளோம்.

நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை கூட்டுவதினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும், யாரும் பிரநிதித்துவ ஜனநாயகத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே அந்த எண்ணத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் உறுதி செய்துள்ளோம்

திமுக – அதிமுக இந்தக்கூட்டத்தை தவிர்த்திருக்கலாம் ஆனால் அவர்களும் இதே நிலைபாட்டை தான் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.