முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் வரத்தை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. இதன் மொத்த கொள்ளளவு 2,645 மில்லியன்…

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் வரத்தை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. இதன் மொத்த கொள்ளளவு 2,645 மில்லியன் கன அடி. ஏரியின் தற்போதைய நீர்மட்ட உயரம் 23.36 அடியாகவும், கொள்ளளவு 3,475 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நேற்று இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு 1,700 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி முழு கொள்ளளவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் ஏரிக்கு வரும்
கிருஷ்ணா நதி நீரை நிறுத்தும் பணியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும், ஏரியின் நீர் மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.