31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

விடுமுறை முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுமுதல் (ஜூன் 20) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் மாணவர்களுக்கு 19 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (ஜூன் 20) முதல் தொடங்கவுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளி வரை 5 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், மாணவர்களுக்கு இன்றே புத்தகங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்

G SaravanaKumar

தனது காதலியுடன் நட்பாக பழகியவரை கொலை செய்த இளைஞர்

Jeba Arul Robinson

ஐபோன் 15 மாடல் அறிமுகம் – முதல் நாளில் அதிகாலை முதலே கடைவாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்..!

Web Editor