தமிழகச் சட்டமன்ற தேர்தலில், 90% இடங்களில் கணிசமான வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சிக்கு 90 சதவிகித இடங்களில் கணிசமான வாக்கு பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது. இத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர்தான் மேலும் தேர்தல் வேட்பாளர்களில் 50 சதவிகித இடத்தை பெண்களுக்கு ஒதுக்கியது. இந்நிலையில் 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.







