முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

கேரளாவில் தற்போது 87 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது.

140 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 143 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 11.30 மணி நிலவரப்படி முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 87 இடங்களில் முன்னணியில் உள்ளது.

கேரளாவில் 2-வது முறையாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

L.Renuga Devi

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

Gayathri Venkatesan

குடியரசுத் தினத்தன்று திமுக சார்பில் டிராக்டர் பேரணி!

Saravana