கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் இருக்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. 11 மணி நிலவரப்படி 134 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு பெற்றுள்ளார்.







