ஏ ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்களைத் தனது இசைக்குழுவுடன் நேரலையில் நிகழ்த்தவுள்ளார்.வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 6) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் தலைமை தாங்குவார்கள் என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்களைத் தனது இசைக்குழுவுடன் நேரலையில் நிகழ்த்தவுள்ளார்.
அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 1 ட்ரெய்லர் வெளியிடப்படுவதோடு இந்த ட்ரெய்லர் கமல்ஹாசன் குரலில் வெளியாகும் என்பது கூடுதல் சிறப்பு.
கமல்ஹாசன் குரலில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: