பொன்னியின் செல்வன் ட்ரைலர் தேதியை அறிவித்த படக் குழு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. வரலாற்று புதினமான பொன்னியின்…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்கில் வெளியாகும் என படகுழு அறிவித்துள்ளது. அதே நேரத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தை படகுழு வெளியிட்டது. இதனால், ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

படத்தின் டீசரும் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாட்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.