குழாய் உடைந்து 3 மாதங்களுக்கு மேலாக வீணாகும் குடிநீர்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக பல லட்சம் லீட்டர் தண்ணீர் வெளியேறி வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக பல லட்சம் லீட்டர் தண்ணீர் வெளியேறி வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனால் இப்பகுதியில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வருகிறது.

மேலும் குழாய் உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளன.இதனால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.