முக்கியச் செய்திகள் விளையாட்டு

தோனி இன்னும் ஒரு வருஷம் சிஎஸ்கே-வுக்கு ஆடணும்: சேவாக் ஆசை

ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி, கோப்பையை கைப்பற்றியது. முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, இறுதிப் போட்டியிலும் முதல் இடத்தைப் பிடித்தது. கடந்த வருடம் ஐபிஎல்-லில் லீக் சுற்றிலேயே வெளியேறிய அந்த, இந்த வருடம் கடுமையான உழைப்பால், கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

இந்நிலையில் டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான ஆலோசகரான சிஎஸ்கே கேப்டன் தோனி, நியமிக்கப்பட்டு இருக்கிறார். தோனி தலைமையிலான சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றி இருப்பது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘ இந்திய அணியில் தோனிக்கான பெருமையை யாராலும் வெல்ல முடியாது.

அவர் சிறந்த கேப்டன். இந்திய அணியாக இருந்தாலும் சிஎஸ்கே அணியாக இருந்தாலும் அவர் அணியை அற்புதமாக வழி நடத்தினார். அந்த அணிக்காக வேறு எந்த கேப்டனும் இப்படி செயல்படுவது கடினமானது. அவர் இன்னும் ஒரு வருடம் சென்னை அணிக்காக ஆடுவார் என்று நினைக்கிறேன். அவர் இன்னும் ஒரு வருடம் ஆட வேண்டும். அதற்கு பிறகே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

Gayathri Venkatesan

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Ezhilarasan

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

Sathis Sekar