பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ’சலார்’ படத்தில் பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘கே ஜி எஃப்’ மற்றும் ‘கே ஜி எஃப்: சாப்டர் 2’ படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் படம், ’சலார்’. இதை கே.ஜி.எப், கே.ஜி.எஃப் 2 படங்களை இயக்கியுள்ள பிரசாந்த் நீல் இயக்குகிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயின்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன் அட்வென்ஞ்சர் கதையோடு உருவாகிறது. இதில், பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, ராஜ மன்னார் என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். அவருடைய கேரக்டர் லுக்கை படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள ஹீரோ பிருத்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படக்குழு, அவரிடம் பேசியிருப்பதாகவும் அவர் இன்னும் தனது முடிவை சொல்லவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.