முக்கியச் செய்திகள்

அக்னிபத் படையில் சேர்ந்தால் தான் தேசப்பற்று வருமா… – சீமான் கேள்வி

அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்று வருமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மேலூர் அருகே தும்பைபட்டியில் தியாகசீலர் கக்கன்னின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கக்கன் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளி மாணவரிடம் ஆசிரியர் சாதி ரீதியாகப் பேசியது கண்டிக்கதக்கது. அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் திட்டங்கள் நிறைவேறுவது என்றால் நாடும் மக்களும் சொல்ல வேண்டும். குடிமக்களின் தலைவர் ஜனாதிபதி. மக்களாட்சியின் தலைவரையே மக்கள் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பை மாற்றுங்கள்.

எல்லாரும் எதிர்க்கும் அக்னிபத்தை ஆளுநர் ஆதரிக்கின்றார். அமித்ஷா ஆதரிக்கின்றார். இப்படையில் சேர்ந்தால் தேசப்பற்று வரும் என்று ராஜ்நாத் கூறுகின்றார். இப்படையில் சேர்ந்தால் தான் தேசப்பற்றா..? என்று கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து, தும்பைபட்டி மந்தைத் திடலில் சீமான் பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாழ்வியல். இதனை நாம் கற்றுகொள்ள வேண்டும். பிறப்பில் இருந்து இறப்பு வரை தீர்மானப்பது அரசு. அதனை தீர்மானிப்பது அரசியல். டீ, டிபன் எல்லாம் பேச்சுவழக்கில் தமிழாக மாறிவிட்டது, ஆனால், நாம் தேநீர் சிற்றுண்டி என மாற்ற முடியும். நாக்கை கூட திருத்த முடியாமல் நாட்டை எப்படி திருத்துவது. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்து கட்சிகள் முதல், இரண்டாவது இடத்தில் உள்ளனர். நான் ஒரு பைசா செலவு செய்யாமல் மூன்றாவது இடத்தில் உள்ளேன், நிச்சயம் தமிழகத்தில் மாற்றம் வரும் என்றார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!

Web Editor

பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

Web Editor

கௌரவ விரிவுரையாளர்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததாக சர்ச்சை

Dinesh A