திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!
SIR-ஐ முழுமையாக ரத்து செய்க!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், தவெகவின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, SIR ரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




