முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி, தங்கைகள் வெற்றிவாகை சூட வேண்டும் – சீமான்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி, தங்கைகளும் வெற்றிவாகை சூடி வர வேண்டும் என நாம் தமிழர் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து (டேபிள் டென்னிஸ்) பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி, தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும், வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா

EZHILARASAN D

அமிதாப்பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது

Jeba Arul Robinson

ரயிலில் பட்டாகத்தியுடன் பயணம் செய்த மாணவர்கள் கைது

G SaravanaKumar