இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் நியூசிலாந்தை இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனை யடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. மேலும் நண்பகல் 1.30 மணிkகு போட்டி தொடங்குகிறது.
முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.







