சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டம் நேற்று 19-வது நாளை எட்டியது. நேற்றும் வழக்கம் போல அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைபோல பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.







