தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 170-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







