மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு நகராட்சி சேர்மன் சீல் வைத்துள்ளார்.
உசிலம்பட்டியில் கழிவறையிலிருந்து மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பி க்கு சொந்தமான கழிப்பறையை நகராட்சி சேர்மன் பூட்டி சீல் வைத்த காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது சாக்கடையை தூர்வாரும் பணிகளை நகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் ஒன்றான பேரையூர் ரோடு பகுதியில் சாக்கடைகளை தூர்வாரும் பணிகளை நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த நகராட்சியின் திமுக சேர்மன் சகுந்தலா பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு எதிரே முன்னாள் காவல்துறை டிஎஸ்பி மணி என்பவருக்கு சொந்தமான கழிப்பறையிலிருந்து வெளியேற்றப்படும் மனித கழிவுகளை சாக்கடையில் இணைப்பு மூலம் கலந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே உடனடியாக அந்த கழிவறையைப் பூட்டி சீல் வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையான செப்டி டேங்க் வசதிகள் கழிவறையில் பயன்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கழிவறை செயல்படுகிறது என்ற உத்திரவாதத்தை வழங்கிய பின்னரே கழிவறை நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் நகராட்சி சேர்மன் உத்தரவிட்டு சென்றார்.
தொடர்ந்து அனைத்து வார்டு பகுதிகளிலும் சாக்கடைகளை தூர்வார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் இது போன்ற குற்ற செயல்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சி சேர்மன் உத்தரவித்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
– யாழன்







