பாலிவுட் பிரபலங்களான கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக காதலித்து பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு இருந்தே பரவியது. ஆனால், சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோதரா தீயாக பரவி வந்த திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவான ஷெர்சா படத்தில் நடித்தபோது, இருவரிடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இருவரது திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில் இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி, பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரம்மாண்டமான முறையில் ராயல் வெட்டிங்கை நடத்த உள்ளனர். கணவன்-மனைவி பந்தத்தில் இணைய காத்திருக்கும், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானியும் ராஜஸ்தான் ஜெய்சல்மரில் உள்ள கோட்டையில் இன்று திருமணம் செய்யவுள்ளனர். இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.