எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கின் குரல், சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு வாக்களிக்க கோரி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவை ஆட்சிவிட்டு அகற்ற மக்கள் முடிவெடுத்து விட்டதாக தெரிவித்தார். மேலும், தமிழ் மொழி, இனம், மக்கள் மற்றும் மாணவர்கள் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட, நெல்லை முபாரக்கின் குரல் தமிழக சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் எனக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.







