முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் உறுதியளித்துள்ளார்.

பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பும் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அப்போது மேலப்பாளையத்தில் உள்ள சிறுபான்மையரிடம் வாக்கு சேகரித்த அவர், துப்புரவு பணியாளர்கள் அதிகம் வசிக்கும் சீவலப்பேரி அம்பேத்கார் காலனியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உரிமையும் கிடைக்க சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

Halley Karthik

பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை : எல்.முருகன்

Ezhilarasan

தமிழகத்தில் இன்று 6,162 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Jeba Arul Robinson