கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…

தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் மாவடத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.