ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

ஜி-20 அமைப்பின் 16 வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ஜி-20 அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 16 வது மாநாடு, இத்தாலியின் ரோம் நகரில் 2 நாட்கள்…

ஜி-20 அமைப்பின் 16 வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.

ஜி-20 அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 16 வது மாநாடு, இத்தாலியின் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பின்னர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாடு, வரும் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டார். நாளையும் ( அக். 30, 31) நாளை மறுநாளும் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம், வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குரித்து பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவுக்கு பிறகு ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதற்கிடையே, இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசையும் அவர் சந்திக்க இருக்கிறார். பிறகு கிளாஸ்கோ செல்லும் பிரதமர்,இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும்சந்திக்க உள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.