செப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டை போன்று, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில்…

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டை போன்று, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டத்தில். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.