முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

தூக்கில் தொங்கிய நிலையில் ’கஞ்சானா 3’ நடிகை சடலமாக மீட்பு

’காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம், ‘காஞ்சனா 3’. இந்தப் படத்தில் நடிகைகள் ஓவியா, வேதிகா, இந்தி நடிகை நிக்கி தம்போலி மற்றும் ரஷ்ய மாடல் அலெக்ஸாண்ட்ரா டாவி (Alexandra Djavi) உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில், பேயாக பழிவாங்கும் கேரக்டரில், அலெக்ஸாண்ட்ரா நடித்திந்தார்.

இவர் கோவா மாநிலம் நார்த் கோவன் எனும் பகுதியில், தனது ஆண் நண்பருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்கிருந்தபடி சினிமா வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில் அவருடைய ஆண் நண்பருக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அலெக்ஸாண்ட்ரா தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 20 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பே, அவர் இறப்புக்கான காரணம் குறித்து தெரிவிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகையின் ஆண் நண்பரிடமும் விசாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அலெக்ஸாண்ட்ரா போலீசில் புகார் கொடுத்திருந்தார். அப்போது அந்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரையும் போலீசார் விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய நடிகை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

எடையை குறைத்த கிம் ஜாங் உன்: பரபரப்பாகும் விவாதம்

Gayathri Venkatesan

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை!

Saravana

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு

Ezhilarasan