முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்ததது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டே முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு, எதிர் மனுதாரராக உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

கோவையில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

Ezhilarasan

ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் பூங்கா

Halley karthi

சுஷாந்த் சிங் மரணம்: மர்மங்கள் நீங்காத ஓராண்டு