மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு தங்களது மிதிவண்டியில் வருகை தரும் மாணவர்கள் தங்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மாணவரின்
மிதிவண்டியை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து இதுபோன்று அடிக்கடி மாணவர்களின் மிதிவண்டியை குறி வைத்து
திருடப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது மிதிவண்டி திருட்டு குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.